உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 11:27 am
indian-men-s-hockey-team-claims-to-5th-spot-in-latest-fih-rankings

சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ரன்னர்-அப் ஆனதால் இந்திய அணி, இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளது. 

சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தங்களது 15-வது ட்ராஃபியை வென்றது. 1906 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பின், 23 புள்ளி பின்தங்கி 2-வது இடத்தில் அர்ஜென்டினா (1883) இருக்கிறது. பெல்ஜியம் (1709) 3-வது இடத்திலும், நெதர்லாந்து (1654) 4-வது இடத்திலும் உள்ளன. 1484 புள்ளிகள் பெற்ற இந்தியா, ஜெர்மனியை (1456) 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு தள்ளியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close