உலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்திய மகளிர் அணி

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 03:26 pm
indian-women-hockey-team-enter-quater-finals-of-fih-world-cup

இந்திய ஹாக்கி சங்கத்தின் உலக கோப்பை போட்டியில், காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி. 

லண்டனில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய மகளிர் அணி, இத்தாலியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. போட்டியின் 9-வது நிமிடத்தில் லால்ரேம்சியாமி முதல் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். அதனை தொடர்ந்து, 3-வது பாதியின் கடைசி நிமிடத்தில் நேஹா கோயல் அடித்த கோலால் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. அதனை அடுத்து போட்டியின் 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா, மேலும் ஒரு கோலடித்து 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தார்.  

வருகிற 3ம் தேதி நடக்க இருக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, அயர்லாந்துடன் மோதுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close