உலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் அயர்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 01:02 pm
world-cup-hockey-india-loses-to-ireland-in-quater-finals

மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதியில் அயர்லாந்திடம் 1-3 என தோல்வி அடைந்தது இந்திய அணி. 

லண்டனில் மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் ஒரு கோலும் அடிக்காத காரணத்தினால், பெனால்டி ஷூட்-அவுட் வைக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்தின் கோல் கீப்பர் ஸ்டீலி மெக்ஃபெரன், இந்திய அணியின் கோல்களை அபாரமாக தடுத்தார். 

இதனால் இந்தியாவால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. ஆனால், மூன்று கோலடித்த அயர்லாந்து, 3-1 என இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா, கேப்டன் ராணி ராம்பால், மோனிகா, நவ்ஜோத் கவுர் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ரீனா க்ஹோகார் மட்டும் ஒரு கோல் அடித்தார்.

அயர்லாந்தின் ராய்ஸின் அப்டன், அலிசன் மேகே மற்றும் சோலி வாட்கின்ஸ் கோல் போட்டனர். 

நாளை (4ம் தேதி) நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் அயர்லாந்து - ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close