ஆசிய போட்டி: இந்தோனேசியாவை 8-0 என துவம்சம் செய்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 01:25 pm
asian-games-india-thrashes-indonesia-8-0-in-opener

ஆசிய விளையாட்டில் மகளிர் ஹாக்கி துவக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தோனேசியாவில் ஜகார்தா மற்றும் பலேம்பாங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்ற இந்தியா- இந்தோனேசியா மகளிர் அணிகளுக்கு இடையிலான துவக்க போட்டி நடந்தது. 60 நிமிடத்தில் இந்தியா, 31க்கும் மேற்பட்ட ஷாட்களை அடித்தது. 19 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்தியா 3 கோல்கள் அடித்தது. அந்த மூன்று கோல்களும் குர்ஜித் அடித்தார். போட்டியில் இந்தோனேசியா கடைசி நிமிடம் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் துவக்க போட்டியில் 8-0 என இந்தியா, இந்தோனேசியாவை துவம்சம் செய்தது.

இந்திய தரப்பில் குர்ஜித் கவுர் 16-வது, 22-வது மற்றும் 57-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். வந்தனா கட்டாரியா (13-வது, 27-வது) 2 கோல்களும், உதித்தா (6-வது), லாளரேமசியாமி (24-வது), நவநீத் கவுர் (50-வது) ஒரு கோலும் அடித்தனர். 

2014ம் ஆண்டு ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா, அடுத்த போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close