ஏசியன் கேம்ஸ் ஹாக்கி: ஹாங்காங்கை கிழித்து தொங்கவிட்ட இந்தியா... சரித்திர சாதனை!

  shriram   | Last Modified : 23 Aug, 2018 03:19 am
hockey-india-crushes-shanghai-26-0

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி தொடரில், ஹாங்காங்கை இந்தியா 26-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குரூப் பி-யில் உள்ள பலம்வாய்ந்த இந்திய அணி, கத்துக்குட்டி அணியான ஹாங்காங்குடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு பெரிய வெற்றியாக அது அமையும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

முதல் நிமிடத்தில் இருந்தே இந்திய அணி முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது. ரூபிந்தர்பால் சிங் 5 கோல்கள் அடிக்க, ஹர்மன்ப்ரீத் சிங் 4 கோல்களும், ஆகாஷ்தீப் சிங் ஹேட்ட்ரிக் கோல்களும் அடித்தனர். முதல் 5 நிமிடங்களில் 5 கோல்களை இந்திய அணி அடித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஹாக்கியில் இந்திய அணி இதற்கு முன் 1932ல் 24-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதே இந்திய அணியின் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டில், சமோவா நாட்டை நியூஸிலாந்து 36-1 என வீழ்த்தியது. சர்வதேச ஹாக்கியில் அதிகப்படியான கோல் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற சாதனை இதுவேயாகுவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close