ஏசியன் கேம்ஸ்: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 06:03 pm
india-beat-korea-to-reach-semis-in-men-s-hockey

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா சார்பாக ருபிந்தர் பால் சிங் (முதல் நிமிடம்), சிங்கலென்ஸான சிங் (4-வது), லலித் உபாத்யாய் (15-வது), மான்ப்ரீத் சிங் (49-வது), ஆகாஷ்தீப் சிங் (55-வது) ஆகியோர் கோல் போட்டனர். இந்தியா ஆடவர் அணி, குரூப் பிரிவு கடைசி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. 

முன்னதாக, மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியை எட்டி இருந்தது. இன்று தாய்லாந்தை இந்திய மகளிர் அணி சந்திக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close