ஆசிய விளையாட்டு: இலங்கையை 20-0 என துவம்சம் செய்தது இந்திய ஹாக்கி அணி

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 05:12 pm
indian-men-s-hockey-team-smashes-sri-lanka-20-0-in-final-pool-match

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, கத்துக்குட்டி அணியான இலங்கையை 20-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில், இந்திய அணி தனது குரூப் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை கோல் மழை பொழிந்தது இந்திய அணி. ஒட்டுமொத்தமாக 20 கோல்கள் அடித்து, இலங்கையை 20-0 என துவம்சம் செய்தது. 

இந்தியா சார்பாக ருபிந்தர்பால் சிங், ஆகாஷ்தீப் சிங், ஹர்மான்ப்ரீத், மந்தீப் சிங், அமித் ரோஹிட்டாஸ், தில்ப்ரீத், லலித், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். 

இதன் மூலம், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. வருகிற 30ம் தேதி அரையிறுதி ஆட்டத்தில் மலேசியாவுடன் இந்தியா மோதுகிறது.

இதே போல் ஆடவர் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியா 2-1 என்ற கணக்கில் கத்தாரை வீழ்த்தி, மூன்றாவது வெற்றியை பெற்றது. அடுத்த சுற்றில் தாய்லாந்தை, இந்தியா எதிர்கொள்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close