20 வருடங்களில் முதன்முறையாக இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 11:53 am
indian-women-s-hockey-team-reaches-first-asian-games-final

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, 20 வருடங்களுக்கு பிறகு இறுதிச் சுற்றை எட்டி சாதனை படைத்துள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மூன்று முறை சாம்பியனான சீனாவை தோற்கடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஒரு கோலடிக்க இரு அணிகளுக்கு இடையில் நடந்த போராட்டத்தில், இந்தியா பெனால்டி கார்னரில் (52-வது நிமிடம்) ஒரூ கோல் அடித்தது. 

1998ம் ஆண்டு பாங்காக் கேம்ஸுக்கு பிறகு, மகளிர் ஹாக்கி அணி இறுதிச் சுற்றை எட்டி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. 

இறுதிச் சுற்றில் இந்தியா, ஜப்பானுடன் மோதுகிறது. அரையிறுதியில் 5 முறை சாம்பியன் தென் கொரியாவை, ஜப்பான் வீழ்த்தி இருந்தது. 

ஆசிய விளையாட்டியின் முதல் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மலேசியாவுடன் மோத உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close