சர்வதேச ஓய்வு முடிவை அறிவித்தார் சர்தார் சிங்

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 10:44 am
sardar-singh-announces-international-retirement

முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

12 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணிக்காக பங்கேற்ற முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இந்திய அணியில் போதுமான போட்டிகளில் பங்கேற்றதாகவும், தற்போது இளம் வீரர்களுக்கான நேரம் என்றும் சர்தார் சிங் தெரிவித்தார். 

ஆசிய கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு சர்தார் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்ற இந்திய அணி ஏமாற்றத்துடன் விடை பெற்றது. இதனால் 2020க்கான ஒலிம்பிக் போட்டிக்கான நேரடியாக தகுதிப் பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது. 

ஓய்வு குறித்து சர்தார் சிங் கூறுகையில், "ஆமாம், நான் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடைய கேரியரில் நான் போதுமான அளவு விளையாடிவிட்டேன். 12 வருடங்கள் என்பது நீண்ட காலம். இப்போது இளம் தலைமுறையின் ஆட்சி செய்யும் காலம். 

இந்த முடிவை எனது குடும்பம், நண்பர்கள், ஹாக்கி இந்தியாவுடன் ஆலோசித்து முடிவெடுத்தேன். ஹாக்கியை தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம்" என்றார்.

ஜகார்தாவில் நடந்த ஆசிய போட்டியின் போது சர்தார் சிங், டோக்கியோவில் நடக்கும் 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசிய முகாமிற்காக நேற்று அறிவிக்கப்பட்ட 25 பேர் கொண்ட அணியில் இருந்து சர்தார் நீக்கப்பட்டது, அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சர்தார், தற்போது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார்.

350 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சர்தார், 8 வருடங்களாக (2008-2016) இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close