ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா 

  டேவிட்   | Last Modified : 21 Oct, 2018 07:54 am
india-bt-pakistan-at-asia-champions-cup-hockey

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை எளிதாக வென்றது.
 
இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர் இர்பான் ஒரு கோல் அடித்தார். பின்னர் இந்திய அணியை சேர்ந்த மன்பிரித் பவார் 24-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும், 42-வது நிமிடத்தில் தில்பிரித் ஒரு கோலும் அடித்து 3-1 என முன்னிலைக்கு கொண்டு வந்தனர். இதன் பிறகு ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close