ஹாக்கி: ஜப்பானை துவம்சம் செய்தது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2018 11:46 pm
india-crushes-japan-in-champions-trophy-hockey

ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் ஹாக்கி அணியை, இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியில் தனது 3வது தொடர் வெற்றியை பதிவு செய்தது. 

துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய இந்தியாவுக்கு ஜப்பானால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4வது மற்றும் 45வது நிமிடங்களில் உபாதெய், 17வது மற்றும் 21வது நிமிடங்களில் ஹர்மன்ப்ரீத், 49வது மற்றும் 56வது நிமிடங்களில் மந்தீப் சிங் ஆகியோர் இரட்டை கோல்கள் அடித்து அசத்தினர். ஆகாஷ்தீப் சிங் மற்றும் சுமித் தலா ஒரு கோல் அடித்தனர். நான்று கால் ஆட்டங்களிலும், இந்திய அட்டாக்கை ஜப்பானால் சமாளிக்க முடியவில்லை. 9-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றி பெற்றது இந்தியா. 

தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்றுள்ள இந்திய அணி, சாம்பியன்ஸ் ட்ராபி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close