ஹாக்கி: ஹர்மன்ப்ரீத் ஹேட்ரிக்; இந்தியா சூப்பர் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 04:58 pm
hockey-champions-trophy-harmanpreet-singh-hattrick-as-india-win-4-1

ஹீரோ சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், தென் கொரியாவை இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஹர்மன்ப்ரீத் சிங், ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.

சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில், சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, தொடர்ந்து 3 வெற்றி ஒரு டிரா பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடரை நடத்தும் ஒமான் நாடு, ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், தென் கொரியா இந்த போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய கட்டாயம். இந்நிலையில், இந்தியா அதிரடியாக போட்டியை துவக்கியது. 5வது நிமிடத்தில், இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹர்மான்ப்ரீத் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

10வது நிமிடத்தில், குஜ்ரந்த் அடித்த ராக்கெட் ஷாட், கோலுக்குள் சென்று,  இந்தியாவுக்கு 2-0 என முன்னிலை கொடுத்தது. அதன்பின் கொரியா எழுச்சி கண்டது, பல வாய்ப்புகளை அந்த அணி உருவாக்க, லீ சியுங் II கோல் அடித்தார். அதன்பின் கிடைத்த வாய்ப்புகளை, தென் கொரிய வீரர்கள் வீணடித்தனர். 

பின்னர், 47வது மற்றும் 55வது நிமிடங்களில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதை பயன்படுத்தி, இரண்டு முறையும் கோல்கள் அடித்து, ஹேட்ட்ரிக் கோல்களை பெற்றார் ஹர்மன்ப்ரீத் சிங். 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்த தொடரில், ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்கும் 3வது வீரர் ஹர்மன்ப்ரீத் ஆவார். இதற்கு முன், இந்தியாவின் தில்ப்ரீத் சிங் மற்றும் பாகிஸ்தானின் அலீம் பிலால் ஆகியோர் ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close