ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான்

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 02:36 pm
asian-champions-trophy-indian-hockey-enters-semi-finals

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் அணியும், நடப்பு சாம்பியனான இந்தியாவும் மோதுகின்றன. 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. 

இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன் பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன. இதனையடுத்து நாளை (27ஆம் தேதி) நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா-ஜப்பான், பாகிஸ்தான்-மலேசியா ஆகிய அணிகள் மோதுகின்றன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close