ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs ஜப்பான் - அரையிறுதி முன்னோட்டம்

  shriram   | Last Modified : 27 Oct, 2018 01:25 pm
hockey-champions-trophy-india-vs-japan-preview

2018ம் ஆண்டிற்கான ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி போட்டியில், ஜப்பானுடன் இந்தியா இன்று மோதுகிறது. இரண்டு ஆசிய சாம்பியன்களிடையே நடைபெறும் இந்த போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளில், ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஜப்பான், நடப்பு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி சாம்பியன்களான இந்தியாவுடன் மோதுகிறது. ஒமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில், இதுவரை இந்திய அணி கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாம்பியன்களை போலவே விளையாடி வரும் இந்திய வீரர்கள், இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு டிரா என அசத்தியுள்ளார். 

அதேநேரம், ஏசியன் கேம்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான், 2 வெற்றி ஒரு டிரா என கடும் போராட்டத்திற்கு பிறகு, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒமான் மற்றும் தென் கொரியாவை மட்டுமே வீழ்த்தியுள்ளது ஜப்பான். மலேசியாவிடம் 3-0 என் தோற்ற ஜப்பான், இந்தியாவிடம் 9-0 என கோல் வித்தியாசத்தில் கந்தலானது. 

இந்நிலையில், இறுதிப் போட்டிக்காக மீண்டும் மோதுவதால், ஜப்பான் வீரர்கள் இந்தியாவை பழிதீர்க்க ஆவலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், நல்ல பார்ம் கிடைக்காமல் போராடி வரும் அந்த அணி, பல பெரிய மாற்றங்களை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

மறுமுனையில், இந்தியா முதல் போட்டியில் ஒமானை 11-0 என துவம்சம் செய்தது. சொதப்பலாக துவங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா 3-1 என அசத்தல் வெற்றி பெற்றது. மலேசியாவுக்கு எதிரான போட்டியில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி டிரா ஆனது. கடைசி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி நல்ல பார்முக்கு மீண்டும் திரும்பியுள்ளது இந்திய அணி.

2013ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஒரு போட்டியில் கூட, இந்தியாவை ஜப்பான் வீழ்த்தியது இல்லை. அதன்பின் நடந்த 12 போட்டிகளில் 11 வெற்றி ஒரு டிரா என ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்தியா. கேப்டன் மன்ப்ரீத் சிங், ஹர்மான்ப்ரீத் சிங் ஆகியோர் சிறந்த பார்மில் இருந்து இந்திய அணிக்கு அச்சாணியாக விளங்கி வருகின்றனர். இதனால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம் என பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close