சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் கோப்பையை பகிர்ந்தன!

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 06:00 am
asian-champions-trophy-hockey-india-pakistan-share-trophy

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி மழையால் நின்றதால், இரு அணிகளும் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன்களான இந்தியா, அரையிறுதி போட்டியில் ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. பலம்வாய்ந்த மலேசியாவுடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான், பெனால்டி ஷூட் மூலம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், உச்சகட்ட எதிர்பார்ப்புடன் இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தயராகின. ஆனால், போட்டி நடையேறவிருந்த ஒமான் தலைநகர் மஸ்கட்டில் தொடர் மழை பெய்து வந்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல், இரு அணிகளும் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close