உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி தேர்வு

  டேவிட்   | Last Modified : 08 Nov, 2018 04:42 pm
hockey-india-unveils-the-18-member-indian-men-s-hockey-team

ஒடிசாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. 

உலக கோப்பை ஹாக்கிப் போட்டி, ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது.  இதில் பங்கேற்கும் இந்திய அணியின் பெயர் பட்டியலை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. 
இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங்கும், துணை கேப்டனாக சிங்கல்சானா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அணியின் தற்போதைய நிலை குறித்து பயிற்சியாளர் ஹேமேந்திர சிங் கூறுகையில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு திறமை வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்திருப்பதாகவும், 36 பேரில் இருந்து 18 பேரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிரமம் இருந்தது, எனவும் குறிப்பிட்டார். மேலும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும் மிகவும் திறமைசாலிகள் எனவும், இந்தியா கண்டிப்பாக தங்கத்தை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.  23ஆம் தேதி வரை இந்திய அணிக்கு புவனேஸ்வரில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஹாக்கி அணியின் விவரம் வருமாறு:

மன்பிரீத்சிங் (கேப்டன்), சிங்கல்சானா சிங் (துணை கேப்டன்), ஸ்ரீஜேஷ், கிருஷ்ண பஹதூர் பதக், ஹர்மந்தர்பிரீத் சிங், பீரேந்திர லக்ரா, வருண் குமார், கோதாஜித் சிங், சுரேந்திர் குமார், அமித் ரோஹிதாஸ், நிலகந்தா ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், ஆகாஷ்தீப், மந்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித் குமார், சிம்ரன்ஜித் சிங்.

இந்திய அணி, சி பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பிடித்துள்ளது. 28ஆம் தேதி நடைபெறள்ள தொடக்கப் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close