உலக கோப்பை ஹாக்கி: இந்தியா-தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

  டேவிட்   | Last Modified : 28 Nov, 2018 02:25 am
world-cup-hockey-commencing-tomorrow-at-odisha

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் இன்று தொடங்கி, டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நடைபெற்றது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில, இந்தியா, இங்கிலாந்து, மலேசியா, கனடா, பாகிஸ்தான், சீனா, பெல்ஜியம், ஜெர்மனி, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகியா 16 நாடுகள் பங்கேற்கின்றனர்.  மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, உலக கோப்பை போட்டியில் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது. 
 
டிசம்பர்  9-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடையும். 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதிகளிலும், காலிறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரையிறுதியும், 16-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உலககோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா நேற்று மாலை  கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றார்.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மற்றும் ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close