இந்திய மகளிர் அணிக்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:54 am
former-australian-striker-glenn-turner-help-indian-women-s-hockey-team

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற பயிற்சி எடுத்து வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அணிக்கு உதவ, முன்னாள் நட்சத்திர ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் க்ளென் டர்னரை வரவழைத்துள்ளது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.

இந்திய மகளிர் ஹாக்கி அணி, அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் கிளென் டர்னர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவராவார். பெங்களூரில் எட்டு நாட்கள் நடைபெறும் தேசிய பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, இந்திய வீராங்கனைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார் டர்னர். 

இந்த முகாம் குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோர்ட் மரினே, "நமது வீராங்கனைகளுக்கு க்ளென் டர்னரின் தனித்துவமான அனுபவம் பெரிதும் உதவும். அவருடைய விளையாட்டு திறனையும் எதிரணி வீரர்களை அவர் எதிர்கொள்ளும் விதத்தையும் பற்றி அவரிடம் இருந்து வீராங்கனைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த முகாம் மூலம் வீராங்கனைகள் மத்தியில் ஒரு பொறுப்புணர்ச்சி வரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close