உலககோப்பை ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; இங்கிலாந்து-சீனா டிரா

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 06:36 am
world-cup-hockey-ausltralia-beat-ireland-by-2-1

ஒடிஷாவில் நடைபெற்றுவரும் உலககோப்பை ஹாக்கி தொடரில் அயர்லாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 

உலக கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த 28ஆம் தேதி ஒடிசா மாநிலம புவனேஸ்வரில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
 
ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிலேக் கோவர்ஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். பின்னர் அயர்லாந்து அணியின் வீரர் ஷானோ டொனொக் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை அடையச் செய்தார். 

இரண்டாவது பாதியில் 34வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டிம் பிராண்ட் அபாரமாக ஒரு கோல் அடித்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி, அயர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டிமோதி பிராண்ட் பெற்றார்

மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், சீனாவும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது. 

இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஆட்டத்தில், நெதர்லாந்து, மலேசியாவுடனும், ஜெர்மனி, பாகிஸ்தானுடனும் மோதுகின்றன. இந்தியா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதுகின்றது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close