உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம்; கனடா-ரஷ்யா ஆட்டங்கள் டிரா !

  shriram   | Last Modified : 02 Dec, 2018 11:50 pm
hockey-world-cup-belgium-holds-india-2-2

இந்தியா பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி தொடர் குரூப் போட்டி, 2-2 என டிராவில் முடிந்தது. 

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின், குரூப் சி-யை சேர்ந்த இந்தியா - பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. போட்டி துவங்கி 8வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது பெல்ஜியம். முதல் பாதி 1-0 என பெல்ஜியம் அணிக்கு சாதகமாகவே முடிந்தது. 3வது கால்மணி நேரத்தில், 39 வது நிமிடத்தின் போது, இந்திய வீரர் ஹர்மான்ப்ரீத் கோல் அடித்தார். அதன்பிறகு தொடர்ந்து அட்டாக் செய்து சிறப்பாக விளையாடியது இந்திய அணி.

கடைசி கால் மணி நேரம் துவங்கிய சில இரண்டாவது நிமிடமே, இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடித்து, முன்னிலை கொடுத்தார். வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு, ஆட்டம் முடியும் நேரத்தில் பெல்ஜியத்தின் சைமன் குக்நார்ட் ஷாக் கொடுத்தார். 56வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை அவர் சமன் செய்தார்.

2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு டிரா என இந்திய அணி, குரூப் சி-யில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் அதே அளவு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 5-0 என துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.  

மற்றொரு லீக் ஆட்டத்தில் கனடாவும், ரஷ்யாவும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close