உலககோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது அர்ஜென்டினா

  டேவிட்   | Last Modified : 04 Dec, 2018 02:39 am
world-cup-hockey-argentina-bt-new-zealand-by-3-0

ஒடிசாவில் நேற்று நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டிரங்கில் 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஏ பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதின.

6-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் திமோதி கிளமெண்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். பின்னர், ஆட்டத்தின் முதல் பாதி வரையில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.  

48வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வரோ இக்லியாஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலைக்கு வந்தது.  பின்னர் எந்த அணியும் கோல் அடிக்காததால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், அர்ஜென்டினாவும் நியூசிலாந்தும் மோதின. இதில் அர்ஜென்டா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெறவுள்ள ஆட்டத்தில், பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆஸ்திரேலியா, அயர்லாந்து-சீனா ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை வரும் 8ஆம் தேதி சந்திக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close