உலககோப்பை ஹாக்கி:  நெதர்லாந்தை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றி !

  டேவிட்   | Last Modified : 06 Dec, 2018 12:29 am

world-cup-hockey-germany-beat-netherlands

ஒடிசாவில் நடைபெற்றுவரும் உலககோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 4 -1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (புதன்கிழமை) டி பிரிவில் உள்ள ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

ஆட்ட தொடக்கத்தின் 13-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.  

பின்னர் ஜெர்மனி வீரர் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், லூகாஸ் விண்ட்பெடர் 52வது நிமிடத்திலும், மார்கோ மில்டாகு 54 வது நிமிடத்திலும், கிறிஸ்டோபர் ரூர் 58வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அபாரமாக விளையாடினர்.  இறுதியில், ஜெர்மனி அணி  4 - 1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜெர்மனி காலிறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் மலேசியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்ததினால், ஆட்டம் டிராவில் முடிந்தது. 

சி பிரிவில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை வரும் 8ஆம் தேதி எதர்கொள்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close