ஹாக்கி உலகக் கோப்பை: அதிரடி மலேசியாவை வீழ்த்தியது ஜெர்மனி

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 05:06 am
hockey-world-cup-hard-fought-malaysia-beaten-by-germany

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று வரும் ஹாக்கி உலகக் கோப்பையில், ஜெர்மனி அணி மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடுமையாக போராடிய மலேசியா, உலகக் கோப்பையில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி சுற்று குரூப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் குரூப் டி-யில், இரண்டு போட்டிகளில், இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த ஜெர்மனி அணி, ஒரு தோல்வி ஒரு டிராவுடன் ஒரே ஒரு புள்ளி பெற்று போராடி வாரும் மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால், தொடரை விட்டு மலேசியா நாக் அவுட் செய்யப்படும் அபாயம் இருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், எதிர்பார்த்தது போலவே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்தில் ஜெர்மனியின் டிம் ஹெர்ஸ்ப்ருக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் கால் மணி நேரம் முடியும் முன்னர், 14வது நிமிடத்தில் ஜெர்மனியின் கிறிஸ்டோபர் ரூர் கோல் அடித்தார். 18-வது நிமிடத்தில் ரூர் மீண்டும் கோல் அடித்து, 3-0 என முன்னிலை கொடுத்தார்.

அதன் பின், மலேசிய அணி, தாக்கி ஆடியது. 26வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹீமும், 28வது நிமிடத்தில் நபில் நூரும் அடுத்தடுத்து கோல்களை அடிக்க, முதல் பாதி முடிவில் 3-2 என எழுச்சி பெற்றது மலேசியா.

39வது நிமிடத்தில், ஜெர்மனியின் மார்கோ மில்ட்கவு கோல் அடிக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே மலேசியாவின் ரஹீம் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடிய மலேசிய அணி, கடைசி நிமிடங்களில் கோல் அடித்து போட்டியை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 59 வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹெர்ஸ்ப்ருக் மீண்டும் ஒரு கோல் அடித்து 5-3 என ஜெர்மனி வெல்ல உதவினார்.

குரூப் டி-யின் மற்றொரு போட்டியில், நெதர்லாந்து அணி பாகிஸ்தானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பாகிஸ்தானும், மலேசியாவும் ஒரே அளவு புள்ளிகள் பெற்றிருந்தாலும், மலேசியாவுக்கு எதிராக எதிரணிகள் பல கோல்கள் அடித்திருந்தன. இதனால் மலேசியா தொடரில் இருந்து நாக் அவுட் செய்யப்பட்டது. ஜெர்மனி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மற்றொரு தகுதி சுற்றில் விளையாடி, அதில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்குள் செல்ல முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close