ஹாக்கி உலகக் கோப்பை: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது பெல்ஜியம்!

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 07:35 pm
hockey-world-cup-belgium-thumps-pakistan

ஹாக்கி உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான இடைநிலை போட்டியில், பெல்ஜியம் அணி, பாகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

குரூப் போட்டிகளில் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாத அணிகள், ஒன்றோடு ஒன்று மோதி, அதன் பின் காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும். இதன்படி, அதிரடியாக விளையாடி குரூப் சி-யில் 2வது இடத்தை பிடித்த பெல்ஜியம், குருப் டி-யில் 3வது இடத்தை பிடித்த பாகிஸ்தானுடன் மோதியது. 

ஆரம்பம் முதல் அட்டகாசமாக விளையாடிய பெல்ஜியம் வீரர்கள், பாகிஸ்தானை திணற விட்டனர். பெல்ஜியமின் அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் 10வது நிமிடத்திலும், தாமஸ் பிரியல்ஸ் 13வது நிமிடத்திலும், செட்ரிக் சார்லியார் 27வது நிமிடத்திலும், செபாஸ்டியன் டோக்கியர் 35வது நிமிடத்திலும், டாம் பூன் 53வது நிமிடத்திலும் கோல் அடித்து, அந்த அணி 5-0 என வெற்றி பெற உதவினார்.

இந்த வெற்றியால் காலிறுதிக்கு பெல்ஜியம் தகுதி பெற, பாகிஸ்தான் நாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close