உலககோப்பை ஹாக்கி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற்றம் !

  டேவிட்   | Last Modified : 13 Dec, 2018 12:39 am
world-cup-hockey-australia-england-in-semifinals

ஒடிசாவில் நேற்று (டிச.12) நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இங்கிலாந்தும், பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் அரையிறுதி போட்டிக்கு  முன்னேறியுள்ளன.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில், லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து நாக் அவட் முறையிலான காலிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், அர்ஜெண்டினாவும் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி திறமையாக ஆடினர். 

17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் முதல் கோலை அடித்தார். 27வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பாரி மிடில்டன் ஒரு கோல் அடித்ததால்,  முதல் பாதியின் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. 

இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் சற்று அதிரடியாக விளையாடினர். 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.  பதிலுக்கு, இங்கிலாந்தின் மற்றொரு வீரரான ஹாரி மார்டின் 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.   இறுதியில், இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பிரான்சும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close