ஹாக்கி உலகக் கோப்பை: ஜெர்மனியை நாக் அவுட் செய்தது பெல்ஜியம்!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 08:09 pm
hockey-world-cup-belgium-vs-germany

உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியில், பலம்வாய்ந்த ஜெர்மனியை பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் பெல்ஜியம் இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.

ஹாக்கி உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. காலிறுதி சுற்று நேற்று துவங்கிய நிலையில், இன்று பெல்ஜியம் அணி பலம்வாய்ந்த ஜெர்மனியுடன் மோதியது. போட்டி துவங்கியது முதல் சிறப்பாக விளையாடிய ஜெர்மனி, முதல் கால் மணிநேரம் முடியும் போது முன்னிலை பெற்றது. 14வது நிமிடத்தில், டீட்டர் லின்னகோஹல் கோல் அடித்தார்.

ஆனால் இரண்டாவது கால் மணி நேரம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, பெல்ஜியமின் அலெக்ஸாண்டர் ஹென்றிக்ஸ் கோல் அடித்து சமன் செய்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பெல்ஜியமின் டாம் பூன் கோல் அடித்து பெல்ஜியம் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பெல்ஜியம் நாளை மறுநாள் மோதுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close