ஹாக்கி உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 10:01 pm
hockey-world-cup-belgium-and-netherlands-in-finals

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பலம்வாய்ந்த பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹாக்கி உலக கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதிய பெல்ஜியம், 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணியின் அலெக்ஸாண்டர் ஹென்றிக்ஸ், ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். போட்டி முழுவதும், பெல்ஜியத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், திணறிய இங்கிலாந்து அணி, தொடரை விட்டு வெளியேறியது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி, 2-2 என சமமாக முடிந்தது. அதன்பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தேர்ந்திருக்க முடிவெடுக்கப்பட்டது அதிலும் இரண்டு அணிகளும் 3-3 என சமனாக இருந்தன. அதைத்தொடர்ந்து, அடுத்த பெனால்டி ஷாட் அடிக்கும் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், நெதர்லாந்து அணி கோல் அடிக்க, ஆஸ்திரேலியா தவறவிட்டது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நெதர்லாந்து நாக் அவுட் செய்தது. 

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜிம் அணிகளும் மோதுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close