ஹாக்கி: உலகக் கோப்பை யாருக்கு? பெல்ஜியம்-நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை !

  டேவிட்   | Last Modified : 16 Dec, 2018 12:05 am
world-cup-hockey-finals-belgium-vs-netherlands

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பலம்வாய்ந்த பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி உலக கோப்பை ஹாக்கிப் போட்டி தொடங்கியது. நேற்று (டிச.15) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதிய பெல்ஜியம், 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணியின் அலெக்ஸாண்டர் ஹென்றிக்ஸ், ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். போட்டி முழுவதும், பெல்ஜியத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், திணறிய இங்கிலாந்து அணி, தொடரை விட்டு வெளியேறியது.
 
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இந்த போட்டி, 2-2 என டிராவில் முடிந்தது. அதன்பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தேர்ந்திருக்க முடிவெடுக்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் 3-3 என சமனாக இருந்தன. அதைத்தொடர்ந்து, அடுத்த பெனால்டி ஷாட் அடிக்கும் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், நெதர்லாந்து அணி கோல் அடிக்க, ஆஸ்திரேலியா தவறவிட்டது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நெதர்லாந்து நாக் அவுட் செய்தது. 

இன்று (டிச.16) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணியே 2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பையை தட்டிச்  செல்வர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close