ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்!

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 09:01 pm
belgium-wins-hockey-world-cup

இந்தியாவில் நடைபெற்று வந்த ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டி ஷூட் மூலம் நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்.

புவனேஷ்வரில் நடைபெற்று வந்த ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பெல்ஜியம் - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் டிபென்ஸை மையப்படுத்தி, பாதுகாப்பாக விளையாடின. அதனால், பெரிய அளவில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆட்ட நேரம் முடிவில், 0-0 எனவே இருந்ததால், போட்டி பெனால்டி ஷூட் முறைக்கு சென்றது. 

பெனால்டி ஷூட்டிலும், 5 முறை முயற்சி செய்து, 2-2 என இரு அணிகளும் சமமாகவே இருந்தன. அதனால், அடுத்த பெனால்டி  வாய்ப்பில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதில், பெல்ஜியம் அணி பெனால்டியை வெற்றிகரமாக எடுக்க, நெதர்லாந்து வீரர் ஹெர்ஷ்பெர்கர் மிஸ் செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்ற பெல்ஜியம் அணி, சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close