தேசிய சீனியர் ஹாக்கி: மணிப்பூரின் மணிசிங் அபாரம்...!

  டேவிட்   | Last Modified : 08 Jan, 2019 12:12 am
national-senior-hockey-at-chennai

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஹாக்கிப் போட்டியில் மணிப்பூர் அணி வீரர் மணிசிங்கின் கடைசி நேர கோலால் மணிப்பூர் - எல்லை பாதுகாப்பு படை அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது. 

சென்னையில் நேற்று (டிச.7) 9வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி தொடங்கியது.  போட்டியை, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு  தலைவர் சேகர் மனோகரன், பொதுச் செயலாளர் ரேணுகாலஷ்மி ஆகியோர் முன்னிலையில்,  தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்க செயலாளர் ஆதவா அர்ஜூனா துவக்கி வைத்தார். 

சுமார் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் நடைபெறும் இந்த தேசிய சீனியர் ஹா்ககி போட்டியில் 41 அணிகள் பங்கேற்று வருகின்றன.  எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்களம் மற்றும் ஐ.சி.எப். மைதானம் ஆகிய இரு இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மத்திய தலைமை செயலக அணி 20க்கு 1 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், பெங்களூரு 20க்கு 1 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும் வீழ்த்தின. ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2க்கு 2 என டிராவில் முடிந்தது. எழும்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 9க்கு0 என பீகாரையும், தெலுங்கானா 5க்கு3 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்டையும், ஜார்கண்ட் 6க்கு2 என்ற கோல்களில் ஜம்மு காஷ்மீரையும் வீழ்த்தின. 

மற்றொரு ஆட்டத்தில் சாஷ்த்ரா சீமா பல் (எல்லை பாதுகாப்பு அணி) ஆட்டம் முடியும் தருவாயில் 3க்கு 2 என்ற கோல்களில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் மணிப்பூர் அணி வீரர் மணிசிங் தனது அபாரமான பீல்டு கோல் மூலம் 3க்கு 3 என ஆட்டத்தை டிராவில் முடித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close