தேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் தமிழகம், எஸ்.எஸ்.பி.

  டேவிட்   | Last Modified : 16 Jan, 2019 02:31 pm
national-hockey-championshipo-tamilnadu-entered-into-quarter-finals

தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் ஈ பிரிவு லீக்கில் பாட்டியாலாவும், எப் பிரிவில் எப்.சி.ஐ.அணியும், ஜி பிரிவில் தமிழக அணியும், எச் பிரிவில் சாய் அணியும் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. நாளை (டிச.17) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டி ஒன்றில் தமிழகம், பி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.எஸ்.பி.அணியுடன் மோதுகிறது.

சென்னையில் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப்பின் போட்டி நடைபெற்று வருகினறது.  இதில் எச் பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் கூர்க் அணியும், அகில இந்திய போலீஸ் அணியும் மோதின. மொத்தம் 6 அணிகள் கொண்ட இப்பிரிவில் முன்னதாக கூர்க் அணி 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 3 வெற்றி 1 டிரா செய்து 10 புள்ளிகள் பெற்றிருந்தது. போலீஸ் அணி 3 வெற்றியும் 1 தோல்வியும் கண்டு 9 புள்ளிகளுடன் மோதியது. எப்படியும் வெற்றி கண்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் இரு அணிகளும் ஆடின. ஆனால் இந்த ஆட்டம் முடியும் வரை இரு அணிகளுமே கோல் போடாமல் சமநிலையில் முடிந்ததால் தலா 1 புள்ளிகளை பகிர்ந்தன.

இதனையடுத்து, அடுத்த லீக் ஆட்டம் சூடுபிடித்தது. அதில் சாய் அணியும், மத்திய பாரத் அணியும் மோதின. முன்னதாக சாய் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி 1 டிரா கண்டு 10 புள்ளி பெற்றிருந்ததால், இந்த எச் பிரிவின் கடைசி லீக் ஆட்டமான இதில் வெற்றி கண்டால் மட்டுமே் காலிறுதிக்கு தகுதி பெறு முடியும். அதற்கேற்ப இந்த அணி 2க்கு0 என வெற்றி கண்டு காலிறுதிக்குள் நுழைந்தது.

ஈ பிரிவு அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி அணியும், பாட்டியாலா அணியும் மோதின. முன்னதாக 2 வெற்றி ஒரு டிரா கண்டு 7 புள்ளிகள் பெற்றிருந்த பாட்டியாலா அணி இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு நுழைய முடியும் என்ற நிலையில், பரபரப்பான இந்த  ஆட்டத்தில் 4-3 என டெல்லியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் மொத்தம் 10 புள்ளிகளுக்கு உயர்ந்து இப்பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. 

நாளை (டிச.17) நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா அணி, சாய் அணியுடனும், 2வது காலிறுதி போட்டியில் தமிழக அணி, சசாஷ்திரா சீமா பல் அணியுடனும், 3வது காலிறுதி ஆட்டத்தில் மத்திய தலைமை செயலக அணி, எப்.சி.ஐ. அணியுடனும், கடைசி காலிறுதி ஆட்டத்தில் பெங்களூர் அணி, பாட்டியாலா அணியுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close