ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அபார வெற்றி; அறையிறுதிக்கு முன்னேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 04:59 pm
senior-s-hockey-national-championship-tamilnadu-to-meet-sai-in-semi-finals

சீனியர் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாடு அணி, 3-0 என்ற கோல் கணக்கில் சசாஷ்த்ர சீமா பல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மஹாராஷ்ட்ராவை வீழ்த்திய எஸ்.ஏ.ஐ அணியுடன் தமிழகம் அரையிறுதியில் மோதுகிறது. 

சீனியர் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், தமிழக அணி, சசாஷ்த்ர சீமா பல் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் சிறப்பாக அட்டாக் செய்து, விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் கால் மணி நேரத்தில் ஒரு கோலும் விழவில்லை. 

20வது நிமிடத்தில், தமிழக வீரர் வினோத் ராயர் பீல்டு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இந்த தொடரில் ராயர் அடிக்கும் 8வது கோல் இதுவாகும். பின்னர் தமிழக அணியின் முத்துச்செல்வன் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 

41வது நிமிடத்தில், ராயர் மீண்டும் ஒரு கோல் அடித்து தமிழகத்தின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி போட்டிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது. 

முன்னதாக, மகாராஷ்டிரா அணியை, 2-0 என வீழ்த்திய எஸ்.ஏ.ஐ (Sports Authority of India) அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும், வரும் சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் மோதுகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close