யாருக்கு ஹாக்கி சாம்பியன்ஷிப்? தமிழகம் vs மத்திய தலைமைச்செயலகம்

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 09:12 pm
national-hockey-championship-tamilnadu-vs-central-secretariat

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை அணி, எஸ்.ஏ.ஐ அணியை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில், இறுதிப் போட்டியில், மத்திய தலைமை செயலக அணியுடன் நாளை மோதுகிறது.

41 அணிகள் பங்குபெற்ற தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில், தமிழக அணி எஸ்.ஏ.ஐ அணியுடன் இன்று மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்தன. 60 நிமிடங்கள் முடிவில், இரு அணிகளும் 3-3 என சமமாக இருந்தன. பின்னர், பெனால்டி சுட வாய்ப்பில், தமிழக அணி 3 முயற்சிகளில் கோல் அடிக்க, எஸ்.ஏ.ஐ அணி 2 கோல்கள் மட்டுமே அடித்தது . இந்த வெற்றியை தொடர்ந்து, இறுதி போட்டிக்கு நுழைந்துளளதால், பி டிவிஷனில் இருந்து முதல்தர ஏ டிவிஷனுக்கு தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த சீசனில் தமிழகம் ஏ டிவிஷனில் விளையாடும். 

மற்றொரு அரையிறுதி போட்டியில், பெங்களூருடன் மோதிய மத்திய தலைமை செயலக அணி 7-6 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட்டில் வெற்றி பெற்றது. நாளை மதியம் 3.00 மணியளவில் நடைபெறும் போட்டியில் தமிழகம், மத்திய தலைமை செயலகத்துடன் மோதுகிறது. பிரதீப் மோர், கோவிந்த்சிங் ராவத், இம்ரான்கான், தரம்பீர் யாதவ் ஆகியோர் மத்திய தலைமை செயலக அணிக்காக கோல் அடித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close