தமிழகம் மற்றும் மத்திய தலைமை செயலகம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில், தமிழக அணி, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
9வது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடி வந்த தமிழகம் மற்றும் மத்திய தலைமை செயலக அணிகள் மோதின. டிவிஷன் பி-யின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம், இரு அணிகளும் டிவிஷன் ஏ-வுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன.
இந்நிலையில், இரு அணிகளும் அட்டகாசமாக விளையாட போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் மாறி மாறி கோல்கள் அடித்தன. போட்டியின் முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் தமிழகம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய ஹாக்கிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
newstm.in