தேசிய ஜுனியர் மகளிர் ஹாக்கி: தமிழக அணிக்கு 4வது வெற்றி !

  டேவிட்   | Last Modified : 29 Jan, 2019 12:31 pm
national-junior-women-s-hockey-tn-registered-its-4th-victory

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜுனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில், தமிழக அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 9வது தேசிய ஜுனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் போபால், ஆந்திரா, தமிழ்நாடு, பெங்களுரு ஆகிய அணிகள் அந்தந்த பிரிவில் முதலாவதாக உள்ளது. 

ஏ-பிரிவில் போபால் 4வது வெற்றியை கண்டுள்ளது. இந்த அணியில் மீனு ராணி, சானு, வர்த்திகா, ஷாஹீன் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 

பி-பிரிவில் தமிழ்நாடு அணி 19-0 என்ற கோல்கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தியதன் மூலம், தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழக அணியில், மலர்விழி, கேப்டன் ரூபாஸ்ரீ, சந்தானமேரி, கதிரொளி, ஹரிபிரியா, கமலேஸ்வரி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்கள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர். 

காலிறுதிப் போட்டி நாளையும் (ஜன.30), அரையிறுதிப் போட்டி வரும் பிப்.1ஆம் தேதியும், இறுதிப் போட்டி பிப்.2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close