மண்டல அளவிலான ஹாக்கிப்போட்டி: கல்பாக்கம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது !

  டேவிட்   | Last Modified : 30 Apr, 2019 05:51 pm
regional-hockey-tournament-kalpakkam-in-finals

திருச்சியில் நடைபெற்று வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவிலான மகளிர் ஹாக்கி போட்டியில் கல்பாக்கம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்க செயற்கை இழை மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. 14, 17வயதிற்குட்பட்டோருக்கான பிரிவுகளின்கீழ் நடைபெறும் இப்போட்டியில் 17வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் திருச்சி, ஆவடி, கல்பாக்கம், அசோக்நகர், அண்ணாநகர் ஆகிய 5 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. 14வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் திருச்சி, அண்ணாநகர், கல்பாக்கம் ஆகிய 3அணிகள் பற்கேற்றன.

காலிறுதிப்போட்டிகள் லீக் போட்டிகளாகவும், அரையிறுதிப்போட்டிகள் நாக்-அவுட் போட்டிகளாகவும் நடத்தப்படுகிறது. இதில் 17வயதுக்குட்பட்டோர் பிரிவில் நேற்றையதினம் நடைபெற்ற லீக்போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு திருச்சி, ஆவடி, அசோக்நகர், கல்பாக்கம் அணிகள் முன்னேறின. இன்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆவடி, கல்பாக்கம் அணிகள் மோதியதில். கல்பாக்கம் அணி 2-1என்ற கோல்கணக்கில் ஆவடி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close