ஹாக்கி : ஜப்பானிடம் வெயிட் காட்டிய இந்தியா !

  கிரிதரன்   | Last Modified : 24 Jun, 2019 09:09 am
indian-women-s-hockey-team-beat-japan-3-1-to-win-fih-series-finals

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஹெச்) நடத்தும் போட்டி தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி, இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவும், ஜப்பானும் மோதின. இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோலும், குருஜித் கௌர் இரண்டு கோல்களும் அடித்தனர். ஜப்பான் அணியின் சார்பில் கனோன் மொரி ஒரு கோல் அடித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிப் பெறுவதற்காக இப்போட்டி தொடர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close