கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன கைஃப் - சாபம் விட்ட நெட்டிசன்கள்

  Anish Anto   | Last Modified : 27 Dec, 2017 10:10 am

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது  கைஃப்புக்கு நெட்டிசன்கள் பலர் சாபம் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2006-ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து  விலகிய பின்னர், முகமது கைஃப் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடுகள பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரை துறையினர் என பலரும் நாட்டு மக்களுக்கும், தங்கள் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது குடும்பத்தாருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். புகைப்படத்தை அவர் பகிர்ந்த சில நிமிடங்களில் நெட்டிசன்கள் பலர், கைஃப்பை வசைபாட துவங்கினர். இது இஸ்லாமிற்கு எதிரானது என்றும், அல்லாவின் கோபத்தை தூண்ட கூடியது என்றும் பலர் பதிவிட்டனர். சிலர் ஒரு படி மேலே சென்று, கைஃப்புக்கு மரணம் ஏற்படும் என சாபம் கூட கொடுத்துள்ளனர். ஆனால் சில நெட்டிசன்கள் கைஃப்புக்கு ஆதரவாகவும் பதிவிட்டனர். மத நல்லிணக்கம் தற்போது நமது சமூகத்திற்கு தேவை என்றும், இது போன்ற விஷயங்களை கண்டுகொள்ளாதீர்கள் என்றும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்திருந்தனர்.

இதற்கு முன்னர் கைஃப் செஸ் விளையாடியதற்காகவும், சூர்ய நமஸ்காரம் செய்ததற்காகவும் நெட்டிசன்களின் தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close