மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

  Anish Anto   | Last Modified : 30 Dec, 2017 12:39 pm

முன்னாள் உலக மல்யுத்த சாம்பியனான சுஷில் குமார் மோடி மீது டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்துள்ளனர்.

நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் காமன்வெல்த் மல்யுத்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் 74 கிலோ  எடை பிரிவில் களம் இறங்கிய சுஷில் குமார் பிரவீன் ராணாவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் சுஷில் குமார் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். போட்டி முடிந்த சில நொடிகளில் பிரவீன் மற்றும் சுஷில் ஆதரவாளர்கள் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சாராமரியாக தாக்கி கொண்டனர். 

இந்த நிலையில் சுஷில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பிரவீன் ராணாவின் சகோதரர் நவீன் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்துள்ளனர். இது குறித்து பேசிய பிரவீன் ராணா, "சுஷிலை எதிர்த்து நான்  போட்டியிட்டதற்காக அவரது ஆதரவாளர்கள் என்னையும், எனது சகோதரரையும் தாக்கினர். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர்கள், வரவுள்ள ப்ரோ ரெஸ்லிங் போட்டியில் பங்கேற்க கூடாது எனவும் எச்சரித்தனர்" என்றார். ஆனால் பிரவீன், போட்டியின் போது தான் சிறப்பாக செயல்படக் கூடாது என்பதற்காக தன்னை கடித்ததாக சுஷில் குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close