சபீர் ரஹ்மான் ஒப்பந்தத்தை ரத்து செய்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்

  Anish Anto   | Last Modified : 02 Jan, 2018 08:21 am

வங்க தேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானின் ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒழுங்கு நடவடிக்கையாக இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. 

கடந்த மாதம் வங்கதேசத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியின் போது தன்னை திட்டிய 12 வயது ரசிகர் ஒருவரை போட்டி இடைவேளையின் போது மைதானத்திற்கு வெளியே சென்று கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அனைவர் முன்னிலையும் வைத்து அடித்தார். மேலும் இது தொடர்பாக போட்டி நடுவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சபீர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது அவரின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஹசன், "புத்தாண்டின் முதல் தினத்தில் அனைத்து வீரர்களுக்கும் உறுதியான ஒரு செய்தியை தெரிவித்து கொள்கிறோம். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம். போட்டி நடுவரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்ட பின்னர் சபீர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இனிமேல் அவர் ஒப்பந்த வீரராக விளையாட முடியாது" என தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் சபீர் 10 டெஸ்ட் போட்டிகள், 46 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close