வந்தாச்சு ஸ்போர்ட்ஸுக்கு தனி ரேடியோ..!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 17 Jan, 2018 05:09 pm


விளையாட்டுச் செய்திகளுக்காகவே ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷஸ் எனும் பிரத்யேக இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் விளையாட்டுகளுக்காக பல தனிச்சேனல்கள் இருக்கின்றன. ஆனால் வானொலி கிடையாது. சில சானல்களில் எப்போதாவது முக்கியமான போட்டியென்றால் ஸ்கோர் மட்டும் சொல்லிவிட்டு பாட்டு போட தொடங்கி விடுவார்கள். விளையாட்டு செய்திக்கு என்று தனி சானல் இருந்தால் பெட்டராகவே இருக்குமே என நினைத்த ஸ்போர்ட்ஸ் ஃப்ளாஸ் என்கிற வானொலி முழுக்க முழுக்க 24*7 பாணியில் இயங்க இருக்கிறது. விளையாட்டைப் பற்றிய நிகழ்வுகள் இந்த வானொலியில் தொகுத்து வழங்கப்படும்.

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷஸ் வானொலி நிறுவனர் ராமன் ரஹேஜா கூறுகையில், "அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விளையாட்டுச் செய்திகளை கொண்டு செல்ல இந்த ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷ் வானொலி தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.  ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷ் என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விளையாட்டு பற்றிய அத்தனை நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close