சேலை கட்டினாலும் மாரத்தான் ஓடலாம்... ஜெயித்து காட்டிய ஜெயந்தி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 18 Jan, 2018 09:50 pm

பெங்களூரூவிலுள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிற ஜெயந்தி சம்பத்குமார் சேலை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு இருக்கிற சேலை மீதான ஈடுபாடு மற்றவர்களுக்கும் வரவேண்டும் என கருதும் அவர், தொடர்ந்து சேலைகளை அணிந்து மாரத்தானில் கலந்துகொண்டு பாரம்பரிய கைத்தறி ஆடைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

துவக்கத்தில் சேலை கட்டி ஓடுவது அவருக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்ததாம். ஆடையில் கொஞ்சம் மாற்றம் செய்தும் தொடர்ச்சியான பல பயிற்சிகளை செய்தும் தற்போது நன்றாக மாரத்தான் ஓடுவதாக கூறும் ஜெயந்தி, சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், சுமார் 42.2 கி.மீ தூரத்தை 5 மணிநேரம் 28 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். மேலும், ஒரு முழு மாரத்தானையும் 4 மணிநேரம் 57 நிமிடங்களில் கடந்து, சேலை அணிந்து வேகமாக மாரத்தான் ஓடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close