தேசிய தடகளத்தில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Jan, 2018 08:04 pm

தேசிய அளவிலான நீளம் தாண்டுதலில் தமிழக மாணவி அபிநயா இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் திங்கள்சந்தைக்கு அருகிலுள்ள மூலச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளர் மோகன் ஜெயராஜ். இவரது மகள் அபிநயா அங்குள்ள காரங்காடு அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 8வது வகுப்பை படித்து வருகிறார்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 63வது தேசிய தடகள போட்டியில் தமிழகத்திலிருந்து ஜூனியர் பிரிவில் அபிநயாவும் கலந்துகொண்டார். அவருடன் 64 பேர் கலந்துகொண்டனர். இதில் அபிநயா நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் தங்க பதக்கங்களை வென்றார். இதனை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவி அபிநயாவிற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி சார்பில் பேன்ட் செட் முழங்க பலத்த வரவேற்புகள் அளிக்கப்பட்டன. அந்த பள்ளியின் தாளாளர் அபிநயாவுக்கு மலர் கிரீடம் அணிவித்து கெளரவம் செய்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close