ஐபிஎல் ஏலம் 2வது நாள்: தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு

  முத்துமாரி   | Last Modified : 28 Jan, 2018 12:26 pm


ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன்-11 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் 78 வீரர்கள் மொத்தம் 321 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2 வது நாளாக இன்று ஏலம் தொடங்கியுள்ளது. 

இதில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரையும்  ராயல் சேலஞ்சர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தமிழக வீரர் முருகன் அஸ்வினை 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தனர். அதேபோல் 18 வயதே ஆன வாஷிங்டன் சுந்தரை முதலில் ஏலம் எடுக்க தயங்கிய அணிகள் பின்னர் ஆர்வம் காட்டினர். முதலில் 1.5 கோடி ரூபாய்க்கு  நிர்ணயிக்கப்பட்ட அவரை இறுதியில் ரூ. 3.2 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர் அணி  வாங்கியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close