உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு - தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்!

  முத்துமாரி   | Last Modified : 28 Jan, 2018 04:10 pm


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி டு பிளிசிஸ், வெய்ன் பிராவோவை தக்க வைத்தனர். 

இந்திய முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தியாவின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இடம் பிடித்துள்ளார்.இதனால் மகிழ்ச்சியில் உள்ள ஹர்பஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், "வணக்கம் தமிழ்நாடு. உங்ககூட இனி கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close