மீண்டும் நீண்ட தலைமுடியுடன் தோனி...வைரலாகும் வீடியோ

  முத்துமாரி   | Last Modified : 04 Mar, 2018 02:45 pm


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விளம்பரம் ஒன்றிற்காக மீண்டும் நீண்ட தலைமுடியுடன் தோன்றியுள்ளார். 

'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், விக்கெட் கீப்பிங் உள்ளிட்ட அவரது கிரிக்கெட் சாகசங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது நீண்ட தலைமுடிக்கு இதைவிட அதிகமான ரசிகர்கள் உண்டு என்றே சொல்லலாம். அவர் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில் அவரைப்போல் முடி வளர்த்துக்கொண்டு திரிந்தவர்கள் ஏராளம். 


இவ்வாறு ரசிகர்களின் அன்பை பெற்ற தோனி சில வருடங்களுக்கு முன்பாக தலைமுடியை குறைத்துக்கொண்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.  பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூட, அந்த முடியை வெட்ட வேண்டாம் என தோனிக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் முடி வெட்டியபிறகு தோனி மீண்டும் அந்த கெட்டப்பில் வரவில்லை. 

தற்போது விளம்பரம் ஒன்றிற்காக அவர் நீண்ட முடியுடன் தோன்றியுள்ளார். அந்த விளம்பரம் இணையங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close