பராலிம்பிக் போட்டி ஆரம்பம்! - கொரிய நாடுகளுக்குள் கருத்து வேறுபாடு

  PADMA PRIYA   | Last Modified : 10 Mar, 2018 03:48 pm

தென்கொரியாவில் மாற்று திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் இம்முறை வட கொரியாவும் பங்கேற்றிருக்கும் நிலையில் தொடக்க அணிவகுப்பு நிகழ்ச்சியிலேயே 2 நாடுகளும் வேறுபாடு உண்டானது.

மாற்று திறனாளிகளின் திறமைகளை உலகிற்கு எடுத்து காட்டும் நோக்கத்துடன் தென்கெரியாவின் பியாங்சாங் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டி ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கியுள்ள போட்டி 9 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பல நாடுகளில் இருந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 

முக்கியமாக இந்தப் போட்டியில் தென்கொரியாவின் எதிரி நாடான வடகொரிய நாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களும் போட்டிக்கான அணி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த இரு நாட்டு வீரர்களுக்கும் எந்த கொடியை ஏந்திக்கொண்டு அணிவகுப்பில் செல்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரண்டு நாட்டு வீரர்களும் தனித்தனியே சென்றனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒன்றாக அணிவகுப்பில் சென்ற நிலையில், மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தனித்தனியே சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close