உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு 4-வது தங்கம்

  PADMA PRIYA   | Last Modified : 11 Mar, 2018 02:20 pm

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அகில் ஷியோரன் (22) தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

முன்னதாக தகுதிச் சுற்றில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் 1176 புள்ளிகளுடன் 2-வது இடம் பெற்றார்.  ஷியோரன் 1174 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், மற்றொரு இளம்வீரரான சுவப்னில் குசாலே தனது முதல் உலக கோப்பை போட்டியில் 1168 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் இருந்தனர்.  மொத்தம் 8 பேர் கொண்ட இறுதி போட்டிக்கு 3 இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இறுதி சுற்றில் 455.6 புள்ளிகள் பெற்று ஷியோரன் முதல் இடத்திற்கு முன்னேறி தங்க பதக்கத்தினை தட்டிச் சென்றார்.  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இது இந்தியாவிற்கு கிடைத்த 4வது தங்க பதக்கமாகும்.

அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரியா நாட்டின் பெர்ன்ஹார்டு பிகல் 452 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close