இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் தோனி- கோலி பெருமிதம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Mar, 2018 07:49 pm


இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தோனிதான், அவரின் இடத்தை பிடிக்க இன்னொருவர் இனி பிறந்துதான் வர வேண்டும் என விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய அணி வீரர்களின் தோழமையைப் பாராட்டுவதில் தோனி சிறந்து விளங்குகிறார் என உச்சநீதிமன்றம் நியமித்துள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தோனி குறித்து கோலி கூறுகையில், "குறிப்பிட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் தோனியைப் போன்று ஒரு வீரரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவரின் அதிவேக செயல்பாடு, மூளையின் வேகம் யாரிடமும் பார்க்க முடியாது. மூன்று வகையான உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்த பின்னர், டெஸ்ட் போட்டியில் தானாக முன்வந்து ஓய்வு பெற்றதோடு, ஒருநாள், டி20 போட்டியில் தன் கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்தவர் தோனி. அவரை போன்ற ஒரு வீரர் இனி பிறந்துதான் வரவேண்டும்" என பெருமையாக கூறியுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close