குழந்தையோடு க்யூட்டாக ஹை-ஃபை விளையாடிய தோனி - வைரல் வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Mar, 2018 06:50 am


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி அங்குவந்த குழந்தையிடம் க்யூட்டாக ஹை-ஃபை செய்து விளையாடிய காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் களம் இறங்க உள்ளது.  11வது ஐ.பி.எல் போட்டிக்கான  முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. 


இந்நிலையில், சென்னை அணியினர் 3வது நாளாக நேற்று சேப்பாக்கம்  மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். பயிற்சி முடிந்து திரும்பியபோது அங்கு வந்த ஒரு குழந்தையிடம் முழங்கால் போட்டு அன்பாக ஹை-ஃபை செய்து விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close